search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்து அரசர்"

    • இன்று இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது
    • இணை பங்கு தந்தை அருட்பணியாளர்கள், பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இதில் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் கடந்த 16-ந்தேதி குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

    இன்று 10-ம் நாள் திருவிழா நடைபெற்றது. காலை ஆயர் நசரேன் சூசை மறை உரையாற்றினார். அருட்தந்தை டோனி ஜெரோம் மற்றும் இணை பங்கு தந்தை அருட்பணியாளர்கள், பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இதில் கலந்துகொண்டனர்.

    இன்று மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு கிறிஸ்து அரசர் கலைக்குழுவினர் நடத்தும் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 10 நாட்களாக நடைபெற்று வரும் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    • 19-ந்தேதி இரவு தேர் பவனி நடக்கிறது.
    • 20-ந்தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    மதுரை விளாங்குடி செங்கோல் நகரில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோனிமஸ் கொடியேற்றி வைத்து, சிறப்பு திருப்பலி நிறைவேற்றி, தொடங்கி வைத்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு பல்வேறு தலைப்புகளில் பல்வேறு பங்குகளை சேர்ந்த பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19-ந்தேதி சனிக்கிழமை இரவு திருவிழா சிறப்புத் திருப்பலியும், தொடர்ந்து தேர் பவனியும் நடக்கிறது. மறுநாள்(20-ந்தேதி) காலை நடைபெறும் சிறப்புத் திருப்பலியில் குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இதனையடுத்து அன்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருளானந்தம் தலைமையில் உதவி பங்குத்தந்தை பென்சிகர், பங்குப்பேரவையினர் செய்துள்ளனர்.

    • திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 13-ந் தேதி முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலி நடைபெறுகிறது.

    ஆசாரிபள்ளம் அருகே உள்ள சடையால்புதூர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந் தேதி 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடைபெறும். ஜோசப் பள்ளி தாளாளர் அருட்பணியாளர் கிளேட்டன் தலைமை தாங்கி கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார். சரல் பங்குதந்தை சிபி மறையுரையாற்றுகிறார்.

    நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடைபெறும். தாளையாங்கோணம் பங்குத்தந்தை ஜான் தாமஸ்க் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    13-ந் தேதி காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலி நடைபெறுகிறது. இதில் முட்டம் வட்டார முதல்வர் ரூபஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சுரேஷ் மறையுரை ஆற்றுகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    19-ந் தேதி காலை 10 மணிக்கு திருமுழுக்கு திருப்பலியும், தொடர்ந்து 11 மணிக்கு அன்பின் விருந்தும் நடைபெறும்.

    திருவிழாவின் இறுதி நாளான 20-ந் தேதி காலை 8.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் அருட்பணியாளர் எட்வின் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் அம்புரோஸ் மறையுரையாற்றுகிறார்.

    20-ந் தேதி மாலையில் பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜோஸ் ஜே பெஸ்கி, பங்கு பேரவை உதவி தலைவர் ஜெஸ்டின், செயலாளர் விக்சன், இணை செயலாளர் ரெட்லின் சோபா, பொருளாளர் ஜோசப் ராஜ் மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.

    • நாளை தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 19-ந்தேதி கிறிஸ்து அரசர் தேர்பவனி நடக்கிறது.

    நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளான நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு முட்டம் வட்டார முதல்வர் ஜான்ரூபஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். கன்னியாகுமரி வட்டார முதல்வர் ஜாண்சன் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவில் 13-ந்தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. கிறிஸ்துநகர் குருக்கள் இல்ல அருட்பணியாளர் அல்போன்ஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். இளைஞர் பணிக்குழு இயக்குனர் ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார்.

    விழாவில் 19-ந்தேதி காலை 7 மணிக்கு பார்வதிபுரம் பங்குதந்தை அருள் தலைமை தாங்கி திருமுழுக்கு திருப்பலியை நிறைவேற்றுகிறார். காலை 10 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலி, மாலை 6 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, தொடர்ந்து கிறிஸ்து அரசர் தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 20-ந்தேதி காலை 7.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட கத்தோலிக்க திருமண நீதிமன்ற நீதிபதி அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமை தாங்கி கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். கோட்டார் மறைமாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு நன்றித்திருப்பலி, கொடியிறக்கம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை டோனி ஜெரோம், இணை பங்குதந்தை ஜேக்கப் ஆஸ்லின், பங்கு அருட்பணி பேரவை துணை தலைவர் டென்னிஸ் பிராங்ளின், செயலாளர் சார்லெட் மேரி, பொருளாளர் இர்வின் ஜியோ நேவிஸ், துணை செயலாளர் சகாய ஞான திரவியம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு இறைமக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலய பெருவிழாவின் இறுதி நாளான நேற்று சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
    நாமக்கல்- திருச்சி சாலையில் கிறிஸ்து அரசர் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்து அரசர் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேவாலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் சேலம் மறைமாவட்ட பொருளாளர் ஜேக்கப் கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து தினசரி நவநாள் திருப்பலி நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று காலையில் சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அவரும் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார்.

    இரவில் நாமக்கல் மறைவட்ட குருக்கள் அருள்சுந்தர் தலைமையில் திருவிழா திருப்பலியும், தேவாலய வளாகத்திற்குள் கிறிஸ்து அரசர் தேர்பவனியும் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்குதந்தை ஜான் அல்போன்ஸ், பிரான்சீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

    நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி நவநாள் திருப்பலி நடைபெற உள்ளது.
    நாமக்கல்- திருச்சி சாலையில் கிறிஸ்து அரசர் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்து அரசர் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பங்குதந்தை ஜான் அல்போன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து தேவாலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் சேலம் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப் கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து தினசரி நவநாள் திருப்பலி நடைபெற உள்ளது. இறுதி நாளான வருகிற 21-ந் தேதி காலை 8.30 மணிக்கு, சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் பங்கேற்று திருப்பலி நிறைவேற்றி, புதுநன்மை உறுதிபூசல் வழங்குகிறார். அன்று மாலை 6 மணிக்கு நாமக்கல் மறைவட்ட குருக்கள் அருள் சுந்தர் தலைமையில் திருவிழா திருப்பலியும், இரவு 7 மணிக்கு தேவாலய வளாகத்திற்குள் கிறிஸ்து அரசர் தேர்பவனியும் நடக்கிறது.
    நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா வருகிற 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.
    நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோட்டார் ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர். திருவிழா வருகிற 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை டோணி ஜெரோம், இணை பங்குதந்தை மைக்கேல் ஐன்ஸ்டீன், பங்கு பேரவை துணைத்தலைவர் டென்னிஸ் பிராங்ளின், செயலாளர் சார்லெட் மேரி, துணை செயலாளர் சகாய ஞானதிரவியம், பொருளாளர் இர்வின் ஜியோ நேவிஸ் ஆகியோர் வழிகாட்டுதலில் பங்குபேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் இணைந்து செய்திருந்தனர்.
    நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் கிறிஸ்துநகரில் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாட்கள் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இதனையொட்டி இன்று காலை 7 மணிக்கு முன்னோர்கள் நன்றி திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது. குழித்துறை மறை மாவட்ட செயலாளர் ரசல்ராஜ் தலைமை தாங்குகிறார். புதுக்குடியிருப்பு பங்கு அருட்பணியாளர் ஜெயசந்திர ரூபன் மறையுரையாற்றுகிறார்.

    14-ந் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறும் முதல் திருவிருந்து திருப்பலிக்கு மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் கில்லாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலையில் நடைபெறும் திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலிக்கு தேவசகாயம் மவுண்ட் வட்டார முதன்மை அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்குகிறார். எட்டாமடை பங்கு அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார்.

    இதேபோல் விழா நாட்களில் தினமும் திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.

    20-ந் தேதி அன்று காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலிக்கு பார்வதிபுரம் பங்கு அருட்பணியாளர் அருள் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு நடைபெறும் குணமளிக்கும் திருப்பலிக்கு வடசேரி பங்கு அருட்பணியாளர் ஆரோக்கிய ரமேஷ் தலைமை தாங்குகிறார். இளங்கடை பங்கு அருட்பணியாளர் ஜோஸ் ஜே.பெஸ்க் மறையுரையாற்றுகிறார்.

    மாலை 5.45 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

    21-ந் தேதி காலை 7.30 மணிக்கு கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலி நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. கொரோனா பரவல் விதிமுறையை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் டோனி ஜெரோம், இணை பங்கு அருட்பணியாளர் மைக்கேல் ஐன்ஸ்டீன், அருட்சகோதரிகள், பங்கு பேரவை உறுப்பினர்கள் மற்றும் பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர்.
    ×